சென்னை:

குடியுரிமை சட்டத்திருத்துக்கு எதிராக இன்று சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் பேரணியில் 85வயது முதியவர் ஓருவர் கையில் பதாதையுடன் கலந்துகொண்டு, மத்தியஅரசுக்கு எதிராக முழக்கமிட்டார்.

தள்ளாத வயதிலும் அவரது செயல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மததியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்தை  திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசசை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் கலந்துகொண்ட பிரமாண்ட  பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் ஓசூரை சார்ந்த நாராயணப்பா என்ற 85 வயது முதியவர் கையில் பதாதையுடன் கலந்து கொண்டு முழக்கமிட்டார். இது பேரணிக்கு வந்தவர்கள் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கூறிய நாராயணப்பா, தான் இந்த பேரணியில் கலந்துகொள்ள்ள ஓசூரில் இருந்து ரயில் மூலம் இன்று காலை சென்னை வந்ததாகவும், எனது குடும்பத்தினர், பரம்பரை பரம்பரை யாக திமுகவில் இருந்து வருவதாக தெரிவித்தவர், தற்போது எனக்கு 85 வயதாகிறது. கருணாநிதிக்காக என் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  தற்போது, கருணாநிதி இல்லையென்றாலும் எங்களுக்கு ஸ்டாலின் உள்ளார். கருணாநிதி ,ஸ்டாலின் இருவரும் ஒன்றுதான். திமுகவின் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொள்வேன்’ என அதிரடியாக கூறினார்.

85வயது முதியவரின் மத்தியஅரசுக்கு எதிரான போராட்டம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

அந்த முதியவர்  என்ன கூறுகிறார் என்பதை நீங்களும் காணுங்களேன்… வாசகர்களே….