உயர் அதிகாரியின்  85 வயது மாமனார், 15 வயது சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடுமை..

உயர் அதிகாரியின்  85 வயது மாமனார், 15 வயது சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடுமை..
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள மாநகராட்சியில் துணை ஆணையராக இருக்கும்  அதிகாரிக்கு அங்கு அலுவலக இல்லம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் ஜெய்ப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி  கடந்த ஆறு மாதங்களாக வீட்டு வேலை செய்து வந்தார். அவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த அப்பாவி சிறுமி ஆவார்.
அந்த இல்லத்தில்  அதிகாரியின்  85 வயது மாமனாரும் தங்கி இருந்தார்.
அந்த முதியவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
‘’இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது’’ என அந்த சிறுமியை அவர் எச்சரித்துள்ளார்.
கிழவரின் அத்துமீறலால், அந்த  சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார்.
அண்மையில் தனது சொந்த ஊருக்குச் சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ந்து போன, சிறுமியின் தாயார் இது குறித்து புவனேஸ்வரத்தில் உள்ள பலி சந்திராபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார், அந்த முதியவர் மீது கற்பழிப்பு, போஸ்கோ மற்றும் வன்கொடுமை ஆகிய மூன்று சட்டப் பிரிவுகளின்  கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுமியை வேலைக்கு அமர்த்திய அந்த அலுவலர் மீது குழந்தை தொழிலாளர் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் மாமனாருடன், அதிகாரியான மருமகனும் தலைமறைவாகி விட்டார்.
அரசுக்குச் சொந்தமான இல்லத்தில் 85 வயது கிழவர் , 15 வயது  சிறுமியைப்  பலாத்காரம்  செய்து கர்ப்பமாக்கிய  சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பா.பாரதி.