ஐந்து வயது குழந்தையை பலாத்காரம் செய்த 85 வயது கிழவருக்கு காப்பு….

 

புவனேஸ்வர் :

டிசா மாநிலம் கேந்திரப்பாரா மாவட்டத்தில் உள்ள ஆவுல் காவல் நிலையத்துக்கு உள்பட்ட ஒரு கிராமத்தில் மளிகை கடை வைத்திருப்பவர் சுனகர் பத்ரா, 85 வயது கிழவர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது கடைக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த ஐந்து வயது குழந்தை வந்துள்ளது. துறுதுறுவென இருந்த அந்த பச்சிளம் குழந்தையை சாக்லெட் தருவதாக கூறி கடைக்குள்ளே அழைத்துள்ளார்.

அப்போது கடையில் யாரும் இல்லை. ஒன்றும் புரியாத அந்த குழந்தையை கிழவர், சுனகர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த குழந்தை அழுது கொண்டே வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளது.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து ஆவுல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் அந்த கிழவரை கைது செய்து விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

விலங்கினும் கீழாக நடந்து கொண்ட கிழவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.

– பா. பாரதி