நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவீத பணம் கருப்புப் பணமா? காங்கிரஸ் கேள்வி

டில்லி,

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவீத பணம் கருப்பு பணமா என்று காங்கிரஸ் உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

என் பணத்தை நான் பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது சரியா என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

நாட்டின் பண மாற்றம் மற்றும் பாகிஸ்தான் தாக்குதல் போன்ற விவகாரங்களால் பரபரப்பாகியிருக்கும் இந்த வேளையில் பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று ஆரம்பமானது.

 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மறைந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

parliment1

நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட்டு, நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று காரசார விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் நாளிலேயே, நாட்டின்  தற்போதைய முக்கிய பிரச்சினையான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து விவாதம் தொடங்கியது.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள்,  பிரதமரின் இந்த அறிவிப்பால் இந்தியாவின் பொருளாதாரம் நிலையற்ற தன்மையை அடைந்திருப்பதாக குற்றம்சாட்டினர்.

மேலும், நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவீத பணம் கருப்புப் பணமா? என்று முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பினார்.

ஏழைகளை வரிசையில் நிற்க வைத்து விட்டு, பணக்காரர்களுக்கு வங்கிகள் பணத்தை மாற்றித் தருவதாகவும் குற்றம்சாட்டினார்.

என் பணத்தை நான்  பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது சரியா என்றும் கேள்வி எழுப்பினர்.

பிரதமரின் நண்பர்கள் கருப்புப் ணம் வைத்திருக்கிறார்கள். 10 கோடி முதல் 10 ஆயிரம் கோடி வரை கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே விமானத்தில் பயணிப்பது எவ்வாறு என்றும் கேள்வி எழுப்பினர்.

வெளிநாட்டில் பணத்தை பதுக்கியுள்ளவர்களின் பட்டியலை பிரதமர் மோடி ஏன் வெளியிடவில்லை என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இவ்வாறு காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.