87 தொகுதிகளில் முன்னிலை: தெலுங்கானாவில் மீண்டும் சந்திரசேகரராவ் ஆட்சி….

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் டிஆர்எஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது.

199 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.  இதில் 87  தொகுதிகளில் தெலுங்கான ராஸ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் தெலுங்குதேசம் கூட்டணி 19 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் முன்னணியில் இருந்து வருகிறது. இதன் காரணமாக டிஆர்எஸ் ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.

தெலுங்கான மாநில சட்டமன்ற ஆயுட்காலம் முடிய இன்னும் 8 மாதங்கள் இருந்த நிலையில்,  தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்டார்.

119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில் 1,821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  கடந்த  7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 73.20% வாக்குகள் பதிவாகின. இந்த  நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் மாநிலத்தில் உள்ள  43 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தேர்தலுக்கு பிந்தயை கருத்துகணிப்புகளில் மீண்டும் டிஆர்எஸ் கட்சியே  ஆட்சியை பிடிக்கும் என வெளிவந்த நிலையில், அதை மெய்ப்பிக்கும் வகையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில்,  அசதுத்தீன் ஒவைசி தலைமையிலான ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சி, ஏற்கனவே சந்திரசேகர ராவ் தலைமையிலான கட்சிக்கு தங்களது ஆதரவினை அளிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.