நெகிழ வைக்கும் சம்பவம்: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மனைவிக்கு உணவு ஊட்டும் 87வயது முதியவர் – வைரல் வீடியோ

பீஜிங்:

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மனைவிக்கு, அவரது 87 வயது கணவர்  படுக்கையில் உணவு ஊட்டும்  வீடியோ வைரலாகி வருகிறது….  அன்புக்கு எல்லை என்பதை இந்த நெகிழ்ச்சி வீடியோ உணர்த்துகிறது.

சீனாவை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமதித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனது வயதான மனைவிக்கு, அவரது 87 வயது கணவர் சிரமப்பட்டு உணவளிக்கும் நெகிழ்ச்சியான காட்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் கொடுமை என்னவென்றால், மனைவிக்கு உணவு அளிக்கும் அந்த 87வயது முதியவரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி அருகில் உள்ள மற்றொரு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நெகிழ்ச்சியான மற்றும் மனதை உலுக்கும்  வீடியோவை அந்த நாட்டின்  பீப்பிள்ஸ் டெய்லி என்ற ஊடகம் பகிர்ந்துள்ளது…

இந்த வீடியோ வைரலாகி வருகிறது… சுமார் 2.9 கே லைக்குகளையும் 669 ரீட்வீட்களையும் பெற்றுள்ளது.

இந்த வீடியோவை காணும் நெட்டிசன்கள், அந்த முதியவர்கள் நோயில் இருந்து குணம் பெற பிராத்தனை செய்வதாக தெரிவித்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 87-Year-Old Man Feeding Coronavirus-Infected Wife in Hospital is Breaking Hearts -viral video, Corona virus, கொரோனா வைரஸ்
-=-