’88:’ பெண்கள் வெளிப்படையாக பேசக் கூடாத விஷயங்களைச் சொல்லும் படமாம்

A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள  புதிய திரைப்படத்தின் பெயர்  ‘88’. (எண்பத்தியெட்டு)

இந்தப் படத்தில்  கதாநாயகனாக மதன் நடிக்கிறார். கதாநாயகியாக உபாஷ்னா ராய் நடிக்கிறார். இவர்களுடன் டேனியல் பாலாஜி  ஜெயப்பிரகாஷ், ஜி.எம். குமார், பவர் ஸ்டார் சீனிவாசன், அப்புக்குட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா, கடம் கிஷன், மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.  இவர்களுடன் ஜான் விஜய்யும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவு – வெற்றி மாறன், இசை – தயாரத்னம், கலை இயக்கம் – ஆரோக்கியராஜ், பாடல்கள் – அறிவுமதி, மதன் கார்க்கி, நடனம் – காதல் கந்தாஸ், படத் தொகுப்பு – அவினாஷ், சண்டை பயிற்சி – சக்தி சரவணன், தயாரிப்பு மேற்பார்வை – ராம் பூபால், இணை தயாரிப்பு – வினோத், தயாரிப்பு – A.ஜெயக்குமார், எழுத்து-இயக்கம் – எம்.மதன்.

இந்த ’88’ படம்குறித்து இயக்குனர் மதன் கூறும்போது, விஞ்ஞான வளர்ச்சி காரணமாக,  செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது.

எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும்  என்பதையும், அதிலும் பெண்கள் எதையெல்லாம் பகிரங்கமாகப் பேசக் கூடாது என்பதை வலியுறுத்துவதுதான் இந்த படத்தின் கதை என்று கூறினார்.

88 படம் அடுத்த மாதம் 14-ம் தேதி படம் வெளியாகிறது.