கோலாகலமாக நடைபெற்று வருகிறது 89வது ஆஸ்கர் அவார்டு விழா!

லாஸ்ஏஞ்செல்ஸ்,

மெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 89வது  ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்று வருகிறது. உலக நாடுகளை சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள், திரையுலக ஜாம்பவான்கள் லாஸ்ஏஞ்சல்சில் குவிந்துள்ளனர்.

விழாவுக்கு வருகை புரிந்த நடிகர்-நடிகைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நட்சத்திரங்கள் கண்கவர் ஆடை அலங்காரங்களுடன் வந்து அசத்தினர். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவையொட்டி, லாஸ் ஏஞ்சலஸ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்தியாவில் இருந்து பிரபல இந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

வயோலா டேவிட்ஸ் -. ஃபென்சஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணைநடிகைக்கான விருது பெற்றார்.

சிறந்த துணை நடிகருக்கான விருது மூன்லைட் படத்தில் நடித்ததற்காக மஹேர்ஷாலா அலிக்கு அளிக்கப்பட்டது

சிறந்த ஒப்பனை – சிகையலங்காரத்திற்கான விருது சூசைட் ஸ்குவாட்ஸ் படத்திற்கு கிடைத்துள்ளது.

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை fantastic beasts மற்றும் where to find them படத்தில் பணியாற்றிய கோலீட் அட்வுட்டுக்கு அளிக்கப்பட்டது.

சிறந்த முழுநீள ஆவணப்பட விருதை O.J.Made in America படம் தட்டிச் சென்றது.

சிறந்த ஒலிக் கலவைக்கான விருது Hacksaw ridge படம் வென்றது.

சிறந்த ஒலி அமைப்புக்கான விருதை Arrival படம் பெற்றது.

ஈரானின் சேல்ஸ் மேன் திரைப்படம், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது.

ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

These are the winners of the 89th annual Academy Awards.

Supporting Actor: Mahershala Ali, “Moonlight”

Supporting Actress: Viola Davis, “Fences”

Animated Feature: “Zootopia”

Cinematography: “La La Land”

Costume Design: “Fantastic Beasts and Where to Find Them”

Documentary Feature: “O.J.: Made in America”

Documentary Short: “The White Helmets”

Film Editing: “Hacksaw Ridge”

Foreign Language Film: “The Salesman”

Makeup and Hairstyling: “Suicide Squad”

Production Design: “La La Land”

Animated Short: “Piper”

Live Action Short: “Sing”

Sound Editing: “Arrival”

Sound Mixing: “Hacksaw Ridge”

Visual Effects: “The Jungle Book”

 

Leave a Reply

Your email address will not be published.