சேலத்தில் 8ம்வகுப்பு மாணவிகள் தற்கொலை! காரணம் என்ன?

சேலம் :

சேலம் டவுன் பகுதியில் உள்ள உணவகத்தின் மாடியில் இருந்து  பள்ளி மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்தனர்.  இதில் ஒரு பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தோழிகளான அந்த மாணவிகளை, பள்ளியில் ஆசிரியர்  பிரித்து தனித்தனியாக  அமர வைத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சேலத்தில் ஜெயராஜ் என்பவரின் மகள் ஜெயராணி மற்றும் சக்திவேலின் மகள் கவிஸ்ரீ. இவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவிகள் இருவரும் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து மாணவிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணையில், இணை பிரியா தோழிகளான அவர்களை பள்ளியில் ஆசிரியர் பிரித்து அமர வைத்ததால், மனமுடைந்த மாணவிகள் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது..