8வது கட்டம்: புழல் சிறையிலிருந்து இன்று மேலும் 3 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிப்பு

சென்னை:

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, 8வது கட்டமாக சென்னை புழல் சிறையில் இருந்து இன்று மேலும் 3 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, 1,700-க்கும் மேற்பட்ட கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறியது.

அதன்படி முதல்கட்டமாக கடந்த ஜூன் மாதம்  6ந்தேதி, முதல்கட்டமாக  67 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதுவரை 7 கட்டமாக   17 ஆயுள் தண்டனை கைதிகள் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட னர். இதன் காரணமாக  மொத்தம் 210 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளளனர்.

இந்த நிலையில்,இன்று 8வது கட்டமாக மேலும்  3 ஆயுள் தண்டனை கைதிகள் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதுவரை மொத்தம் 8 கட்டங்களாக 12 பெண்கள் உட்பட 213 ஆயுள் தண்டனை கைதிகள் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்