டில்லி:

9.3 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 30 கோடி பேர் பான் கார்டு எடுத்துள்ளனர். இவர்களில் சுமார் 9.3 கோடிக்கும் அதிகமானோர் அதாவது 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் பான் கார்டுகளில் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என வருமான வரித்துறை சார்பில் கூறப்பட்டிருந்தது. அதற்காக வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதத்தில் சுமார் 3 கோடி பேர் தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணையும் இணைத்தனர்.

ஆண்டிற்கு 5 லட்சத்திற்கு அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கான வருமான வரி தாக்கலுக்கு கடந்த 5ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்து.

வருமான வரி தாக்கலுக்கு ஆதார் பான் இணைப்பு காட்டாயமக்கப்பட்டிருந்ததால் அதன் மூலம் இதுவரை 9.3 கோடிக்கும் அதிமானோர் பான் கார்டுடன் ஆதார் இணைத்துள்ளனர். பான், ஆதார் இணைப்பிற்கு வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.