திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்கியது: விமரிசையாக நடைபெற்ற அங்குரார்ப்பணம்

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருப்பதி  கோவில்

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவ விழா விமரிசையாக தொடங்கியது முன்னதாக நேற்று இரவு அங்குரார்ப்பணத்தில் விஷ்வ சேனாதிபதி ஊர்வலம் நடைபெற்றது.

கலியுக தெய்வமான சீனிவாச பெருமாளுக்கு முதலில் பிரம்மதேவன் உற்சவத்தை நடத்தியதால் பிரம்மோற் சவம் என அழைக்கப்படுவதாக வரலாறு கூறுகிறது.

ஆண்டுதோறும் நடைபெற்றும் திருப்பதி  பிரம்மோற்சவ விழா இன்று (13ந்தேதி)  கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. 9 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த பிரமோற்சவ விழாவை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். வரும்  21-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் பலவித வாகனங்களில் உற்சவ மூர்த்தி தயார்களுடன் எழுந்தருளி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

இன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்பணம் நடைபெற்றது.

சீனிவாச பெருமாளின் சர்வ சேனாதிபதியான விஷ்வசேனதிபதியை கோயில் அர்ச்சகர்கள், ஜீயர்கள் முன்னிலையில் மேற்கு திசையில் உள்ள வசந்த மண்டபத்திற்கு நாதஸ்வரங்கள் முழுங்க கொண்டு சென்றனர்.

அங்குள்ள சுத்தமான பகுதியில் மண் எடுக்கப்பட்டு, கோயிலில் உள்ள யாக சாலையில் 9 பானைகளில் வைத்து நவதானிங்கள் செலுத்தி முளைகட்டும் விதமாக பூஜை செய்யப்பட்டது.

‘இந்த அங்குரார்பணத்திற்கு நவதானியங்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படவுள்ளது.

ஏற்கனவே  11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந் நேற்று   இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை அங்குரார்ப்பணம் நடைபெற்றது.

இன்று (13-ந்தேதி)  மாலை 4.45 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, மூலவர் வெங்கடாஜலபதிக்கு பட்டு வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை பெரிய சே‌ஷ வாகன வீதிஉலா நடக்கிறது.

14-ந்தேதி காலை சிறிய சே‌ஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா,

15-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா,

16-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா,

17-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடக்கிறது.

18-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 5 மணியளவில் தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா,

19-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா,

20-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 11 மணிவரை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா,

21-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை சக்கர ஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி), இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கொடியிறக்கத்தோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 9 days Tirupathi Piramorcavam starts, last night celebrated angurarppanam, திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்கியது: விமர்சையாக நடந்த அங்குரார்ப்பணம்
-=-