Random image

13ந்தேதி திருப்பதி பிரம்மோற்சவம் தொடக்கம்: நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருப்பதி:

ண்டுதோறும் நடைபெற்று வரும் திருப்பதி  பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு வரும் 13ந்தேதி (வியாழக் கிழமை)  கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் பக்தர்களுக்காக ரியில்வே சிறப்பு ரயில்களை நாளை முதல் இயக்குகிறது.

திருப்பதி திருமலையில் tரும் 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. 9 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த பிரமோற்சவ விழாவை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

இதையொட்டி, நாளை (11ந்தேதி)  முதல்  10 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து  தினமும் மாலை 5.10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் இரவு 10 மணி அளவில் சென்னை கடற்கரையை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல,  தினசரி பிற்பகல் 3 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து ரேணிகுண்டாவுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.  இந்த ரயில், திருத்தணி, புத்தூர் வழியாக சென்று  மாலை 4.30க்கு ரேணி குண்டாவை சென்றடையும்.

அதுபோல  சென்னை கடற்கரையில் இருந்து நாளை முதல் வரும் 20ந்தேதி  வரை அரக்கோணம் வரைசிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கடற்கரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணி அளவில் அரக்கோணத்தை சென்றடையும்.

இவ்வாறு ரயில்வே அறிவித்து உள்ளது.