செப்டம்பர் 13ந்தேதி: திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்…

திருப்பதி:

ண்டுதோறும் நடைபெற்றும் திருப்பதி  பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு அடுத்த மாதம் 13ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

9 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த பிரமோற்சவ விழாவை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். செப்டம்பர்  13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

அதேபோல் அக்டோபர் மாதம் 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. காலை, இரவு இருவேளைகளில் ஆகம விதிப்படி பல்வேறு வாகன வீதிஉலா நடக்கிறது.

இதுவரை காலை நேரத்தில் வாகன வீதிஉலா வழக்கம்போல் 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரையும்,  இரவில் 9 மணியில் இருந்து 11 மணிவரை நடைபெற்று வந்தது.

ஆனால் இந்த ஆண்டு முதல் இதில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  காலை நேரத்தில் நடைபெறும் வீதியுலா வழக்கம்போல் 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை  நடைபெறும் என்றும், ஆனால், இரவில் நடக்கும் வாகன வீதிஉலா நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை நடக்கிறது. கடந்த ஆண்டு கருட சேவை நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு இரவு 7 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி,

12-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை அங்குரார்ப்பணம்,

13-ந்தேதி மாலை 4.45 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, மூலவர் வெங்கடாஜலபதிக்கு பட்டு வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை பெரிய சே‌ஷ வாகன வீதிஉலா நடக்கிறது.

14-ந்தேதி காலை சிறிய சே‌ஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா,

15-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா,

16-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா,

17-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடக்கிறது.

18-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 5 மணியளவில் தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா,

19-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா,

20-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 11 மணிவரை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா,

21-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை சக்கர ஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி), இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கொடியிறக்கத்தோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 9 days Tirupathi Piramorcavam will start on 13th September, செப்டம்பர் 13ந்தேதி: திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
-=-