சென்னையில் கத்திமுனையில் ரூ. 9 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை

பாரிமுனையில் உள்ள பேன்சி ஸ்டோர் ஊழியரிடம் கத்திமுனையில் ரூ.9 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்ரபீக். இவர் பாரிமுனையில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் ஊழியராக பணிபுரிகிறார். நேற்று இரவு 8.30 மணி அளவில் ரூ.9 லட்சத்தை பாரிமுனையில் உள்ள ஏ.டி.எம் மிஷின் மூலம் டெபாசிட் செய்ய எடுத்து சென்றார். ஏ.டி.எம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அப்துல் ரபீக்கை வழி மறித்த அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர் பேக்கில் வைத்திருந்த ரூ.9 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து எஸ்பினேடு போலீசில் அப்துல்ரபீக் புகார் செய்தார். உடனே அங்கு விரைந்து வந்த குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேசுவர் விசாரணை நடத்தினார். அப்போது அப்துல் ரபீக் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான வீடியோக்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கார்ட்டூன் கேலரி