பிஹார்:
னிமைப்படுத்தல் மையத்தில் வசதி குறைவாக இருப்பதாக புகார் தெரிவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பஞ்சாபில் இருந்து தங்கள் சொந்த ஊரான பீகார் மாநிலத்துக்கு நடந்து சென்று 9 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நடு வழியில் தடுத்து நிறுத்தப்பட்டுக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். சொந்த ஊருக்கு செல்வது குற்றமா?  என்று கேள்வி எழுப்பிய அவர்களிடம், பிஹாரின் மட்ஹேபுரா தனிமைப் படுதல் மையத்தில் போதுமான வசதிகள் இல்லை என்று புகார் தெரிவித்த காரணத்தால் அவர்கள் கைது செய்யப் படுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மே 20 அன்று, மாதேபுராவின் குமர்கண்ட் தொகுதியின் கீழ் உள்ள ராம்நகர் மகேஷ் கிராமத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை “உள்ளூர் அதிகாரிகளின் அனுமதியின்றி” மாற்றியதாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது ஐபிசி பிரிவு 188 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து தொழிலாளர்களில் ஒருவரான மனோஜ் முகியா தெரிவிக்கையில், “மே 17 அன்று குமர்கண்ட் தொகுதியின் அதிகாரிகள், தனிமைப்படுத்தப்பட்ட மையமாக நியமிக்கப்பட்டுள்ள ராம்நகர் மகேஷில் உள்ள நடுநிலைப் பள்ளியை எங்களில் மூன்று பேரை தங்க வைத்தனர். அடுத்த இரண்டு நாட்களில் , மேலும் ஆறு பேர் எங்களுடன் இணைந்தனர். மையத்தில் எந்த வசதிகளும் இல்லை – தண்ணீர் மற்றும் மின்சாரம் எதுவும் இல்லை என்றார்.
தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் மோசமான நிலைமைகள் குறித்து கோபமடைந்த புலம்பெயர்ந்தோர், ஒரு வீடியோவை படம் பிடித்து சமூக ஊடக தளங்களில் மே 19 அன்று பகிர்ந்துள்ளனர். இது உள்ளூர் அதிகாரிகளுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது.

குமர்கண்ட் தொகுதி மேம்பாட்டு அதிகாரி (பி.டி.ஓ) உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடன் அதே மாலை மையத்தை அடைந்து வேறு மையத்திற்கு அழைத்துச் சென்றார். வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டதற்காகவும், தனிமைப்படுத்தப்பட்ட மையமாக நியமிக்கப்படாத பள்ளியில் தங்கியதற்காகவும் மறுநாள் எங்களுடன் இருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

மார்ச் 23 அன்று, குமர்கண்ட் பி.டி.ஓ ஒரு உத்தியோகபூர்வ உத்தரவின் பேரில் நடுநிலைப்பள்ளி ராம்நகரை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையமாக அறிவித்தது. இங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மேலும் 6 பேர், தங்களின் வசதிக்கு ஏற்ப எந்த தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலும் தங்கலாம் என்று அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நான் குமர்கண்டில், ரவுட்டாவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் என்னை இறக்கிவிடுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்கள் எந்த வாகனமும் எனக்கு வழங்கவில்லை. இதனால், ரவுட்டா குமர்கண்டிலிருந்து 7 கி.மீ தூரத்தில் இருப்பதால், நான் அங்கு அவர்களிடம் செல்லலாமா என்று கேட்தற்கு, நீங்கள் எந்த மையத்திலும் தங்கலாம் என்று கூறினர்.

குருகிராமில் இருந்து மாதேபுரா வரை 1,200 கி.மீ தூரத்திற்கு சைக்கிள் ஓட்டிய குல்ஷன் குமாரும் இதே போன்ற கருத்தை தெரிவித்தார்.  மே 18 ஆம் தேதி இரவு நான் ராம்நகரை அடைந்தேன், மற்றவர்களுடன் நடுநிலைப் பள்ளியில் தங்கியிருந்தேன். அடுத்த நாள், எங்களுக்கு ரவுட்டா தனிமைப்படுத்தப்பட்ட மையம் ஒதுக்கப்பட்ட இடத்தில் பதிவு செய்ய நாங்கள் இரண்டு பேருடன் குமர்கண்ட் சென்றேன். நாங்கள் தங்க முடியுமா என்று அவர்களிடம் கேட்டோம். ராம்நகர் தனிமைப்படுத்தப்பட்ட மையம், எனது கிராமத்திற்கு அருகிலேயே, எங்கள் உடமைகள் அங்கேயும் வைக்கப்பட்டிருந்ததால், அவர்கள் என்னை அனுமதித்தனர். ஆனால் அடுத்த நாள், நாங்கள் குமர்கஞ்சிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது என்றார்.

ராம்நகரின் கிராமத் தலைவரான ராம்டோனியா தேவி, பள்ளி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையமாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு கிடைத்ததை உறுதிசெய்ததுடன், போலீஸ் நடவடிக்கையை ஏழை புலம்பெயர்ந்தோருக்கு எதிரான “அநீதி” என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், முசாபர்பூரின் காந்தி பகுதியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் வசதிகள் இல்லாததால், அங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உண்ணாவிரதத்தை நடத்த தூண்டுவதற்காக ஐபிசியின் 188, 269, 270 மற்றும் 253 பிரிவுகளின் கீழ் ஒரு நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.