நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாத நிலையில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா நொய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள்அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில்  கடந்த 30ந்தேதிக்கு பிறகு கொரோனா தொற்று பரவாமல் இருந்து வந்தது. அங்கு இதுவரை 9 பேர் மட்டுமே கொரோனா வால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளதால் புதிய வரவுகள்  இல்லாததால், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மே 4ந்தேதி முதல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம்போல செயல்படும் என மாநில கலெக்டர் இன்னசென்ட் திவ்யாஅறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று   புதிதாக 9 பேருக்கு கொரோனா நொய்த் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.