விருதுநகர்:

ருப்புக்கோட்டை  தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில்  நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விசாரணையை தொடங்கிய கவர்னர் அமைத்துள்ள விசாரணை குழுவின் அதிகாரி சந்தானம் இன்று அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் விசாரணை நடத்தினார்.

அவருடன் வந்த 2 பெண் அதிகாரிகளும், நிர்மலாதேவி மீது புகார் கூறிய 4 மாணவிகளிடமும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம், இன்று தேவாங்கர் கல்லூரியில் இதுவரை 9 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.  மேலும் 12 பேரிடம் விசாரணை நடத்த  இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து  நாளை அல்லது வரும் 25ம் தேதி நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும், அவர் தற்போது சிபிசிஐடி போலீஸ் காவலில் இருப்பதால்,  அவரிடம் விசாரணை மேற்கொள்ள எனக்கு எந்த தடையுமில்லை என்று கூறினார்.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஒருவர் மட்டுமே எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வருவதால், நிர்மலா தேவி மீது புகார் கூறிய 4 மாணவிகளும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பேராசிரியை மீது புகார் கூறிய 4 மாணவிகள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.