தான்ஸானியாவில் கடும் வெள்ளப் பெருக்கு….9 பேர் பலி

தார் ஏஸ் ஸலாம்:

தான்ஸானியா நாட்டின் தார் ஏஸ் ஸலாம் நகரில் 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வீடு, வணிக வளாகங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. சாலைகளில் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்துக்கு 9 பேர் பலியாகியுள்ளனர்.

50 லட்சம் மக்கள் தொகையை கொண்ட கடற்கரை நகரமான தார் ஏஸ் ஸலாமில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதற்கு முறையான வடிகால வசதி இல்லாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் வரும் மே மாதம் வரை இங்கு பலத்த மழைக்கு வாய்பபு இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.