துனிசியாவில் பயங்கரவாதிகள் குண்டுவீச்சு…9 போலீசார் பலி

டுனிஸ்:

துனிசியா நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த வகையில் அல்ஜீரியா எல்லையோரம் துனிசியா நாட்டின் மேற்கு பகுதியில் ஜென்டோவ்பா மாகாணத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனங்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 9 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர்.