9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு கொரோனா 

நாக்பூர்:
9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
நாக்பூரில் உள்ள சுயசேவை சங்க தலைமையகத்தில் உள்ள 9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தனர், இவர்கள் சிகிச்சைக்காக நகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் 9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களில் பெரும்பாலானோருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்கள் அனைவருமே தற்போது நலமாக உள்ளனர் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார். அதே கட்டிடத்தில் வசிக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி ஆகியோர் இப்போது அங்கு இல்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்து 9 பேரும் அறிகுறி அற்றவர்களாக இருந்தனர் என்றும் தெரியவந்துள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்குதலால், கட்டிடத்தின் உள்ளே இருக்கும் அனைத்து அறைகள் உட்பட முழு வளாகங்களும் சுத்தம் செய்ய பட்டுள்ளன.
இதற்கிடையில் மத்திய போக்குவரத்து அமைச்சரும், நாக்பூரைச் சேர்ந்த மக்களவை உறுப்பினருமான நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.