நாகப்பட்டினம்:

நாகப்பட்டினத்தில் கடந்த  9ஆண்டுகளாக  செயல்பட்டு வந்த போலி மாற்று மருத்துவ மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு  அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

இந்த பல்கலைக்கழகம் மூலம் போலியாக சான்றிதழ் பெற்ற ஆயிரக்கணக்கா னோர் நாடு முழுவதும் மருத்துவர்களாக பணியாற்றி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள குத்தாலத்தில் ஒரு வீட்டில்,  அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவ பல்கலைக்கழகம் என்ற பெயரில் மருத்துவ பல்கலைக் கழகம் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த பல்கலைக்கழகத்தின் மூலம் சித்தா, ஆயுர்வேதா போன்ற சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுவதாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன.

இதை உண்மை என்று நம்பி இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் பணம் கட்டி படிக்காமலே சான்றிதழ்களும் பெற்று  இந்தியா முழுவதும் மாற்றுமுறை மருத்துவராக மருத்துவம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் விண்ணப்பம் தொடர்பான விளம்பரம் குறித்து  சந்தேகம் அடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்ய முடிவெடுத்தனர். அதைத்தொடர்ந்து  சென்னையில் உள்ள மருத்துவ விழிப்புணர்வு பணி துணை போலீஸ் சூப்பிரண்டு தாமஸ்பிரபாகர் தலைமையில், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனரக அதிகாரிகள் மற்றும் நாகை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் உள்பட அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

போலி மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’

இந்த ஆய்வில்  அந்த பல்கலைக்கழகம் போலியானது என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அங்கிருந்த   போலி சான்றிதழ்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.  பின்னர் குத்தாலம் தாசில்தார் முன்னிலை யில் மருத்துவ அதிகாரிகள் போலி பல்கலைக்கழகத்தை மூடி சீல் வைத்தனர்.

விசாரணையில்,  இந்த போலி மருத்துவ பல்கலைக்கழகம் மூலம்  இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ்களை பெற்று மருத்துவம் பார்த்து வருவதாகவும்,  கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் பேர் சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட தகவல் குறித்து ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் குறித்து அந்ததந்த மாவட்ட சுகாதார துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்எ ன அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இந்த மாற்று முறை மருத்துவ போலி பல்கலைக்கழகத்தை நடத்தி குத்தாலத்தை அடுத்த திருவேள்விக்குடி கிராமத்தை சேர்ந்தசெல்வராஜ் என்பவர்.  இவர் கைது செய்யப்பட்டரா என்பது குறித்து தகவல் இல்லை.