கோலார்

ர்நாடகா மாநிலம் கோலார் அரசு மருத்துவமனையில் 90 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த உடனேயே 3 குழந்தைகள் மரணம் அடைந்தன.  இது தொடர்பாக கர்னாடகா மாநில சுகாதாரத்துறை அரசுக்கு ஒரு அறிக்கை அளித்துள்ளது.   இதனால் இங்குள்ள பெற்றோர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சுகாதாரத்துறை அறிக்கையின் படி,  இந்த மருத்துவமனையில் கடந்த ஜனவரி முதல் 1053 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.  அவற்றில் 90 குழந்தகள் மரணமடைந்துள்ளனர்.    இது மட்டுமின்றி கடந்த வருடமும் இதே மருத்துவமனையில் 82 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த கர்னாடக மாநில குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் இது குறித்து மருத்துவமனையில் விசாரித்து அறிந்து முதல்வர் சித்தராமலிங்கையாவிடம் புகார் அளித்துள்ளனர்.   முதல்வர் இது குறித்து விரிவான அறிக்கையை சுகாதரத்துறையிடம் கேட்டுள்ளார்.  அது மட்டுமின்றி உண்மை கண்டறியும் குழு ஒன்றை பா ஜ க தலைவர் எடியூரப்பா  அக்கட்சியின் மூத்த தலைவரான சுரேஷ் குமார் தலைமையில் நியமித்துள்ளார்.