மேற்குவங்கம்: மோடி பொதுக்கூட்ட கூடாரம் சரிந்து 90 பேர் காயம்

கொல்கத்தா:

பிரதமர் மோடி பொதுக்கூட்ட கூடாரம் சரிந்து 90 காயம் அடைந்தனர்.

மேற்கு வங்கம் மிட்னாப்பூரில் பாஜக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரதமர் பங்கேற்றதால் இரும்பு தூண்களுடன் மிகப்பெரிய கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது அவரை பார்ப்பதற்காக கூடாரத்துக்கு போடப்பட்டு இருந்த இரும்பு கட்டுமானத்தின் மீது சிலர் ஏறி நின்றனர். அவர்களைம் கீழே இறங்குமாறு மோடி கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதனால் பாரம் தாங்காமல் கூடாரத்தின் ஒருபகுதி திடீரென சரிந்து விழுந்தது.

இதில் 90 பேர் காயமடைந்ததுள்ளனர். அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.