Random image

வரும் தேர்தலில் 90% பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைவார்கள் : பாஜக எம் எல் ஏ

குருசேத்திரா, அரியானா

ரும் தேர்தலில் பாஜகவின் வேட்பாளர்களில் 90% பேர் தோல்வி அடைவார்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர்  ராஜ்குமார் சைனி கூறி உள்ளார்.

அரியானா மாநிலம் குருசேத்திரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாஜகவை சேர்ந்த ராஜ்குமார் சைனி ஆவார்.    இவர் கடந்த சில நாட்களாக பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.    நேற்று குருசேத்திரா மாவட்டத்தில் உள்ள திகாவ் கிராமத்தில் ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்னும் பேரணி நடைபெற்றது.

இந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சைனி இந்த பேரணியில் கலந்துக் கொண்டார்.   அவர் அங்கு உரையாற்றும் போது, “பாஜகவுக்கு தற்போது அரசியலில் சரியான குறிக்கோள் இல்லை.  அத்துடன் சரியான அரசியலை அக்கட்சி நடத்துவதும் இல்லை.

இதன் விளைவாக நடைபெற உள்ள மாநில மற்றும் மத்திய தேர்தல்களில் அக்கட்சியின் வேட்பாளர்களில் 90% பேர் தோல்வி அடைவார்கள்.

வேலை இல்லா திண்டாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது.   அத்துடன் அரசிலும் ஊழல்கள் அதிகரித்துள்ளன.

இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் எனில் அடிமட்டத்தில் இருந்து அனைத்து மட்டங்களிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.   வெறும் பேச்சில் வேலை இல்லா திண்டாட்டம் தீராது.   அதே போல பேசி பேசியே ஊழலை ஒழிக்க முடியாது. ” என தெரிவித்துளார்.