சென்னை:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியாகி வருபவர்களில் 50.05 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில்,  தமிழகத்தில் 90 சதவிகிதம் பேர் முதியோர்கள் மற்றும் டயபட்டீஸ் போன்ற நாட்பட்ட நோய் தாக்கம் உள்ளவர்கள் என்று நிபுணர் குழு தெரிவித்து உள்ளது.

இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப் படும் முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை தமிழக அரசிடம் நிபுணர் குழு சமர்ப்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகம், டெல்லி, உ.பி., ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்தியஅமைச்சர் ஹர்ஷவர்தன்,  கொரோனா தொற்றால் இறந்தவர்களின் 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவித்து உள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,002 பேர் குணமடைந்து உள்ளனர் என்றும்,  கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2.94% பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். உலகளவிலான இறப்பு சதவீகத்தை விட இந்தியாவில் இறப்பு சதவீதம் குறைவாக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில், கொரோனாவுக்கு  நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள முதியவர்களும், நாள்பட்ட நோய்களுடன் போராடி வருபவர்களும் அதிக அளவில் பலியாகின்றனர். இதை தடுக்கும் நோக்கில் 35-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு சமீபத்தில் அமைத்தது.
இந்த குழுவினர் தங்களது ஆய்வு அறிக்கையை தமிழகஅரசிடம் சமர்ப்பித்து உள்ளனர். அதில்,  தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட வர்கள் நீரழிவு போன்ற நாட்பட்ட நோய் தொற்று உள்ளவர்கள் என்று தெரிவித்து உள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்படும் முதியோர்கள், நாள்பட்ட நோயாளிகளை கையாள்வது குறித்தும் பல்வேறு பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
இந்த பரிந்துரைகள் அனைத்தும்,  தமிழக காதாரத் துறை உயர் அதிகாரிகள் பரிசீலனைக்குட்படுத்தி வருவதாகத் தெரிகிறது. விரைவில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.