லண்டன்: இங்கிலாந்தில் முதன்முறையாக  கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. முதலில், 90வயதான மார்கரெட் கெனன் என்ற மூதாட்டிக்கு பிஃபைசர் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.  பல நிறுவனங்களின் தடுப்பூசிகள் இந்த மாத இறுதி அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்தில், , பிஃபைஸர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனாதடுப்பூசி போட அந்நாடு அனுமதி அளித்துள்ளது.  இதையொட்டி இன்று முதல் இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

முதல்கட்டமாக முதியவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், சுகாதாரத்துறையினருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இன்று முதல் தடுப்பூசி  90வயதான மார்கரெட் கெனன் என்ற மூதாட்டிக்கு பிஃபைசர் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டது.

பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில்,  இங்கிலாந்துக்கு நிறுவனம் பிஃபைசர் நிறுவனம் ஏற்கனவே  8 லட்சஃம் டோஸ்  ஆர்டர் செய்திருந்தது. அதன் மூலம் சுமார் 20 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி உள்ளது.

ரஷ்யாவில் ஏற்கனவே கடந்த சனிக்கிழமை அன்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கபட்டது குறிப்பிடத்தக்கது.