900 ஆண்டுகள் பழமையான தங்கப் புதையல் இஸ்ரேலில் கண்டெடுப்பு!

கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் பழமையான தங்கப்புதையலை அகழ்வாராய்ச்சியாளர்கள் இஸ்ரேலில் கண்டுப்பிடித்துள்ளனர். மண்ணின் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்கள் நாணயங்களும், ஆபரணமும் கிடைத்துள்ளன.

old-gold-coin

இஸ்ரேல் நாட்டின் சீசெரா நகரில் உள்ள ஒரு வீட்டில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டின் அடியில் இருந்த தங்கப்புதையல் ஆராய்ச்சியர்களில் கைகளில் கிடைத்தது.

old

இரண்டு கற்களுக்கு இடையே மறைத்து வைத்திருந்த அந்த புதையலில் வெண்கலப் பாதிரம் ஒன்றில் 24 தங்க நாணயங்களும் ஒரு காதணியும் இருந்தன. இதனை கிறிஸ்துவ பைஜெண்டைன் சாம்ராஜியத்தை சார்ந்தவர்களாலும், முஸ்லீம்களாலும் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஆகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

900nyres

அதுமட்டுமின்றி இந்த புதையல் கிட்டத்தட்ட 900 ஆண்டுகளுக்கு முன்பு மறைத்து வைக்கப்பட்டுள்ள்தாகவும் அவர்கள் கணித்துள்ளனர். புதையலில் கிடைத்த தங்க நாணயங்களில் பைஜெண்டைன் சாம்ராஜ்யத்தை சார்ந்த அரசர்களான மூன்றாம் ரெமானோஸ் மற்றும் ஏழாம் மிக்கேல் டக்ளஸ் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

900

இருப்பினும் புதையலில் கிடைத்த தங்க நாணயங்களின் இன்றைய மதிப்பு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

You may have missed