கடந்த சில வருடங்களாகவே புற்று நோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர். ஏப்ரல் 30 காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் சேர்ந்து பணியாற்றிய பிரபலங்கள் அவரை பற்றி ட்வீட் செய்வதுடன், வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ரிஷி கபூருடன் சேர்ந்து 5 படங்களில் நடித்த மீனாக்ஷி சேஷாத்ரி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/MinaxhiSeshadri/status/1256007333056073729
அந்த வீடியோவை பார்த்த 90ஸ் கிட்ஸுகள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் அப்படி வியக்க மீனாக்ஷி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருப்பது தான் காரணம்.