நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த்தாக தமிழகத்தில் 924 பேர் மீது வழக்கு

நீதிமன்ற அறிவிப்பின்படி அரசு கொடுத்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்த 924 பேர் மீது தமிழகம் முழுவதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

காற்று மாசை குறைப்பதற்காக இந்த வருட தீபாவளிக்கு இரண்டு  மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு  ஆணையிட்டது. இந்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தால், இ.பி.கோ. 188 பிரிவின் கீழ் வழக்கு பதியப்படும் என்றும்,  குற்றம் உறுதியானால் ஆறுமாதம் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை செய்த்து.

தீபாவளி என்றாலே பட்டாசுதான் பிரதானம். இந்த நிலையில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடா என்று பலரும் ஆதங்கப்பட்டனர்.  குறிப்பாக சிறுவர்கள் வருத்தமடைந்தனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை பொருட்படுத்த வேண்டியதில்லை. மத ரீதியான பாரம்பரிய வழக்கத்தில் எந்த வொரு தலையீடும் இருக்கக்கூடாது. தவிர, பட்டாசு வெடித்தால் கொசு அழியும். இதன் மூலம் டெங்கு காய்ச்சல் ஒழியும் என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் பேசி வந்தனர்.

இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் என தமிழகம் முழுதும் 924  பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ராசிபுரத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் 40 வயது சித்தேஸ்வர பிரபு என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். திருவிடைமருதூர் அருகே மருதாநல்லூரில் 27 வயது சுபாஷ், 36 வயது ராஜவேல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். சென்னையில் 4 வழக்குகள், கடலூரில் 4 வழக்குகள் ராசிபுரம் – 1, கொடைக்கானல் – 2, நெல்லை – 10,விருதுநகர் – 80,கோவை – 48, திருப்பூர் – 57 வழக்குகளும் போடப்பட்டுள்ளன. பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசாணையை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 135 வழக்குகுள் பதியப்பட்டுள்ளன.,

Leave a Reply

Your email address will not be published.