93வயது கம்யூ தலைவர் நல்லக்கண்ணு: திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக 5 நாட்கள் தேர்தல் பிரசாரம்

சென்னை:

93வயதாகும் இந்திய  கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர்  நல்லக்கண்ணு 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள், ஐஜேகே, கொங்குநாட்டு மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிக் உள்பட பல கட்சிகள் இணைந்துள்ளன.

தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  நல்லக்கண்ணு 5 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் 10ந்தேதி முதல் 15ந்தேதி வரை 5 நாட்கள் அவர் தொடர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.