கடந்த 24மணி நேரத்தில் 93,337 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.61% ஆக குறைவு…

டெல்லி: கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும்  93,337 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும்,  தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.28% ஆக உயர்ந்துள்ளதாகவும்,  கொரோனா உயிரிழப்பு 1.61% ஆக குறைந்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

உலகநாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா, இந்தியாவையும் முடக்கி உள்ளது.  குறிப்பிட்ட சில மாநிலங்களில்  பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்திக் கொண்டே வருகின்றன. தற்போது பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இருப்பதால், தொற்று பரவலும் கட்டுக்கள் வராமல் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நேற்று ஒரேநாளில் 93,337 பேருக்கு கொரோனா உறுதியானதால்,  இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 53,08,014 ஆக அதிகரித்துள்ளது.

ஒரேநாளில் 1,247 பேர் கொரோனாவால் உயிரிழந்தியிருப்பதால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 85,619 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை எகொரோனாவில் இருந்து 42.04 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர்.

தற்போதைய கொரோனா பாதித்த 10.13லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.61% ஆக குறைந்து வருவதாகவும், அதே வேளை யில்,  குணமடைந்தோர் விகிதம் 79.28% ஆக  அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  விரைவில் இந்தியா முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் மத்திய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.