சேலத்தில் தீவிரமடையும் கொரோனா தொற்று: இன்று ஒரே நாளில் 94பேர் பாதிப்பு…

சேலம்:

சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு  இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை  45,814 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் நேற்று (24ந்தேதி) மாலை நிலவரப்படி, 48 பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை404 ஆக உயர்ந்திருந்தது. இதுவரை 215 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில்,  இன்று ஒரே நாளில் மேலும் 94 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

 

கார்ட்டூன் கேலரி