டெல்லி:

த்திய நிதித்துறை ஏற்கனவே அறிவித்தபடி, 94ஆண்டு பழமையான சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடன் இணைந்து பொதுத்துறை வங்கியாக மாறியது. இன்றுமுதல் இந்த மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில், கடந்த  2017ம் ஆண்டு,  27 பொதுத்துறை வங்கிகள் இயங்கி வந்தனர். ஆனால், மோடி அரசு, அவைகளை இணைத்து, 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும் வகையில் மாற்றங்களை செய்து வருகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுவதால், வங்கிகள் கடன் கொடுக்கும் அளவு அதிகரிக்கும், நெட்வொர்க் அதிகரிக்கும், வங்கி, வாடிக்கையாளர்கள், வங்கி பணியாளர்கள் என அனைத்து தரப்புக்கும் இதனால் நன்மை கிடைக்கும் என்று நிதி அமைச்ச்ர நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, ஏற்கனவே சில வங்கிகள் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டு பெரிய நெட்வொர்க் வங்கிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது, கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் காரணமாக கனரா வங்கி நாட்டின் 3வது பெரிய நெட்வொர்க் வங்கியாக மாறி உள்ளது.

94 ஆண்டுகால பழமைய வாய்ந்ததும், தனித்துவதுமான சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்க அந்த வங்கியின் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அதை கண்டுகொள்ளாத மத்தியஅரசு, திட்டமிட்டபடி  இன்றுமுதல் வங்கியை இணைத்து  உள்ளது.