கொரோனா : மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 9431 பேருக்கு பாதிப்பு

மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 9431 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் அதிக அளவில் பாதிப்புள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.

இன்று ஒரே நாளில் 9481 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகி 267 பேர் உயிர் இழந்து 6044 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மொத்தம் பாதிப்படைந்தோர் 3,75,799 ஆகி அதில் 13,656 பேர் உயிர் இழந்து 2,13,238 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது இங்கு 1,48,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை குணமடைந்தோர் விகிதம் 56.74% ஆக உள்ளது.

மும்பை நகரில் இன்று 1101 பேர் பாதிக்கப்பட்டு 57 பேர் உயிர் இழந்து 1362 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மும்பையில் மொத்தம் 1,09,161 பேர் பாதிக்கப்பட்டு 6093 பேர் உயிர் இழந்து 80,238 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மும்பை நகரில் ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் இன்று இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.