24மணி நேரத்தில் மேலும் 94,372 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47,54 ,357ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 94,372 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்,  இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47,54 ,357ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்து வருகிறது.  சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தினசரி 90ஆயிரத்துக்கும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப் படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து, இன்று மத்திய சுகாதாரத்துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94,372-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  1,114- பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதனால்,  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்து 54 ஆயிரத்து 357- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 73 ஆயிரத்து 715-பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 37 லட்சத்து 02 ஆயிரத்து 596 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆயிரத்து 586- பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.