வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதி..

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 96 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1600ஐ தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலில் முதலிடத்தில் சென்னை உள்ளது. அதைத்தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம், திருவண்ணாமலை, மதுரை மாவட்டங் களிலும் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் நேற்றுமாலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,   தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1521 ஆக இருந்தது.  அவர்களில் 380 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 1137 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  இதுவரை 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று மேலும்  96பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி