சர்வானந்த் – சமந்தா நடிக்கும் ’96’ பட தெலுங்கு ரீமேக்….!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘96’ படம் , வசூலை அள்ளி தந்தது. பெரும்பாலானவர்களின் பள்ளிக்கால காதலை நினைவுபடுத்தும் வகையில் இருந்ததால் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. ‘ராம்’, ‘ஜானு’ என விஜய் சேதுபதி, த்ரிஷாவின் கதாபாத்திரப் பெயர்கள் பிரபலமடைந்தன.

இந்நிலையில் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் இந்தப் படத்தை ரீமேக் செய்து வருகின்றனர். தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்க, சர்வானந்த் – சமந்தா இருவரும் நடிக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டது .‘லைஃப் ஆப் ராம்’ பாடலுக்கான காட்சிகளைக் கென்யாவில் படமாக்கியுள்ளனர்.

கன்னடத்தில் இந்தப் படம் ‘99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கணேஷ் – பாவனா நடித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி