சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வவருதால், அணையின் நீர்மட்டம் 100அடியை நெருங்கி உள்ளது. தற்போதைய நிலையில் 97.42 அடியாக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அணையின் நீர் மட்டம் 100 அடி தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,  அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்பட அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து, ஒகேனக்கல் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

இதன் காரணமாக,  மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 97.42 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 15ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்துபாசனத்திற்கு 10,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.