கொரோனா: சென்னையில் இன்று மேலும் 978 பேருக்கு பாதிப்பு…

சென்னை: தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழகத்தில் இன்று 5,967 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது.

அதிக பட்சமாக சென்னையில் இன்று 978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147591 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தற்போது 10645 பேர் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

சென்னையில் ல் இன்று 17 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,959 ஆக உள்ளது.மட்டும் இதுவரை 2,959 பேர் உயிரிழந்துள்ளனர்.