98 வயதில் முதுகலை பட்டம் பெற்ற முதியவர்…! யார்? எங்கே…?

பாட்னா,

பீகாரில் 98 வயது நடக்க முடியாத முதியவர் சக்கர நாற்காலியில் வந்து முதுகலை பட்டம் பெற்றார். இது பார்ப்பேர்களை பரவசரப்படுத்தியது.

ஒவ்வொரு மனிதனும் கட்டாயம்  கற்க வேண்டியது கல்வி.  கல்வி கற்பது ஒன்றுதான் நாம் வாழும் காலம் வரை நம்மை வாழ வைக்கும். தனது குழந்தை பருவம் முதல் இறக்கும் வரை கல்வி கற்றாலும், அதில் முழுமை அடைய முடியாது. அதனால்தான்   ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு’  என்று ஆற்றோர்கள் கூறி உள்ளார்கள்.

அதற்கேற்றார்போல, பீகார் நாளந்தா பல்கலைக்கழகத்தில் 98 வயதில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார் முதியவர் ஒருவர். சக்கர நாற்காலியில் வந்து அவர் பட்டம் பெற்றது, பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற வந்தவர்களின்  மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

பீகாரில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில், மேகாலயா கவர்னர் கங்காபிரசாத் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு  பட்டம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அப்போது, பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.பி.சின்கா இந்த பல்கலைக்கழகத்தில் 98 வயதில் பட்டம் பெறும் முதல் முதியவர் ராஜ்குமார் வைஸ் தான் என்று  கூறினார். அவருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

தள்ளாடும் வயதில் நடக்க கூட முடியாத  ராஜ்குமார் வைஸ், 3 சக்கர வண்டியில் வந்து தனது பட்டத்தை பெற்றது அனைவரின் மத்தியிலும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்குமார் வைஸ் 1938–ம் ஆண்டடே தனது பட்டப்படிப்பை முடித்து, வக்கீலுக்கு படித்துள்ளார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு சென்றுள்ளார். படிப்பை தொடர முடியவில்லை. இருந்தாலும், தனது கனவான முதுநிலை பட்டம் பெற வேண்டும் என்ற நோக்கத்தை கைவிடாமல், டந்த 2015–ம் ஆண்டு நாளந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ.) படிப்பில் சேர்ந்தார்.

அதையடுத்து தேர்வெழுதி தற்போது முதுகலை  பட்டம் பெற்றுள்ளார். தள்ளாத வயதிலும் அவரது விடா முயற்சி  நாடு முழுவதும் போற்றப்படுகிறது.