பிரித்விராஜூடன் வெளிநாடு ஷூட்டிங் சென்றவருக்கு கொரோனா தொற்று..

டிகர் பிரித்விராஜ் தனது கனவு படமான ’ஆடு ஜீவிதம்’ மலையாள படத்தில் நடிப்பதற்காக கடந்த 2 மாதத்துக்கு முன் ஜோர்டான் நாட்டுக்கு சென்றார். அங்கு ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டதால் படப்பிடிப்பும் நடத்த முடிய வில்லை, ஊருக்கும் திரும்ப முடியவில்லை. பின்னர் மத்திய மாநில அரசு அவர்களை மீட்டுவந்தது.


திரும்பிவந்த படக் குழுவினர் தனிமைப் படுத் தலில் இருந்தனர். இவர்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்த நிலையில் படக் குழுவினருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 58 வயதான ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவரை குன்னம்குளம் தாலுகா மருத்துவமனையில் அனுமதித்து டாக்டர்கள் குழு சிகிச்சை அளிக்கிறது.