கணவருக்கு முடிவெட்டிய மணிரத்னம் நடிகை..

டந்த 1998 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வந்த படம் உயிரே. இதில் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா நடித்திருந்தனர். இதில் அறிமுகமானவர் பிரீத்தி ஜிந்தா. பின்னர் இந்தி படங்களில் நடித்தார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார்.


கடந்த 2016 ம் ஆண்டு ஜெனே குட்யெனஃப் என்பவரை மணந்தார். ஊரடங்கு நாளில் கணவருடன் வீட்டில் இருக்கும் பிரீத்தி கொரோனா தொற்று பரவலால் தனது கணவரை சலூனுக்கு அனுப்ப பயந்து அவரே கணவருக்கு அழகாக முடிவெட்டி அழகுபார்த் தார்.
சும்மா சொல்லக்கூடாது நன்றகாவே முடி வெட்டியிருக்கிறீர்கள் என்று அவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர். கணவருக்கு முடி வெட்டும் புகைப்படம் மற்றும் வீடியோ நெட்டில் வலம் வருகிறது.