வரலாற்றில் முதல் முறையாக போக்சோ சட்டத்தில் 99 வயது முதியவர் கைது

பூந்தமல்லி, சென்னை

பூந்தமல்லியில் ஒரு 99 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி என்னும் பூந்தமல்லியின் அருகில் உள்ள சென்னீர்குப்பத்தில் வசிப்பவர் பரசுராம்.   சுமார் 99 வயதாகும் இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார்.   இவர் மீது பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் பதியப்பட்டுள்ளது.

இவரை பூவிருந்தவல்லியை சேர்ந்த சென்னீர்குப்பம் காவல் நிலைய காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.   போக்சோ சட்டத்தின் கீழ் இவ்வளவு வயதானவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.