கொரோனாவில் இருந்து மீண்ட 99 வயது மூதாட்டி..

கொரோனாவில் இருந்து மீண்ட 99 வயது மூதாட்டி..
கர்நாடக மாநிலம் பெங்களூரூவைச் சேர்ந்த மர்சிலினா சல்தானாவின் வயது 99.
கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அங்குள்ள விக்டோரியா மருத்துவமனையில் கடந்த 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்குக்  கடந்த ஒன்பது நாட்களாக டாக்டர்கள் கண்ணும் , கருத்துமாகச் சிகிச்சை அளித்தனர்.
சல்தானா தேறுவார் என அவரது குடும்பத்தினரே எதிர்பார்க்கவில்லை.
ஆனால் கொரோனாவை வென்று அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.
சல்தானாவுடன் அவரது பேரன் விஜயும், கொரோனா அறிகுறியுடன் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
பாட்டியுடன் சேர்த்து அவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஒரு ட்விஸ்ட்.
கடந்த 18 ஆம் தேதி தான் சல்தானாவின்  99 வது பிறந்த நாள் ஆகும்.
அன்று தான் கொரோனா தொற்றால் சல்தானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் 99 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு , குணம் அடைந்திருப்பது இதுவே முதல் முறை.
-பா.பாரதி