டேனி அல்வ்ஸ்:

லக நாடுகளை மிரட்டிவரும் கொரோனா வைரஸ் பிரேசிலையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அங்கு இரண்டாம் உலகப்போரில் பங்குகொண்ட 99வயது முன்னாள் வீரர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் நோய் தோற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பி உள்ளார்.

பிரேசில் நாட்டில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 28,912 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1760 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதுவரை 14,026 பேர் நோய் தொற்றில் இருந்து விடுப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில்,பிரேசில் ராணுவப் படையைச் சேர்ந்த முன்னாள் வீரர், 99வயதான எர்மாண்டோ பிவெட்டா என்பவர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், பிரேசில் ராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  எட்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்த நிலையில்,  நேற்று தனது டிரேட் மார்க்கான பச்சை நிற ராணுவத் தொப்பியுடன் உற்சாகமாக வீடு திரும்பினார். அவரை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களும் உற்சாகமாக கையசைத்து வழியனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பிரேசில் ராணுவம்  வெளியிட்ட அறிக்கையில், `இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியின் மோன்டிசியில் நடந்த போரில் பிரேசில் படை வெற்றி பெற்ற 75வது ஆண்டு நினைவு தினத்தன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இந்த முறை பிவெட்டா கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரில் வெற்றி பெற்றுள்ளார்’ என்று கவுரவப்படுத்தி உள்ளது.

கூறப்பட்டுள்ளது.