டிகர் கமல்ஹாசன் தேவர்மகன்2ம் பாகத்தை ’தலைவன் இருக்கிறான்’ என்ற பெயரில் இயக்கி நடிக்க உள்ளார். முதல்பாகத்தில் இறந்துபோகும் நாசரின் மகனாக 2ம் பாகத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார். இதுகுறித்து கமல், விஜய்சேதுபதி இருவரும் ஜூம் வீடியோவில் கலந்துரையாடினார். இப்படத்தில் இணைவதற்கு முன்பே விஜய் சேதுபதி, கமல்ஹாசன் கெட்டப்பில் இருக்கும் ஒரு புகைப்படம் நெட்டில் வைரலாகி வருகிறது.


சத்யா என்ற படத்தில் சம்மர் கட்டிங் ஸ்டைலில் முடி வெட்டிக்கொண்டு முரட்டு தோற்றத்தில் இருப்பார் கமல். அதேபோல் விஜய் சேதுபதி ஹேர் ஸ்டைலில் இருக்கும் முரட்டு தோற்ற படம் வெளி யாகி இருக்கிறது. இப்படங்கள் 2011 ம் ஆண்டில் எடுக்கப்பட்டதாம். 9 வருடத்துக்கு பிறகு விஜய்சேதுபதியின் தோற்றதில் மாற்றம் ஏற்பட்டி ருந்தாலும் அவரை வைத்து சத்யா படத்தின் 2ம் பாகம் எடுக்கலாம் என விஜய் சேதுபதி ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
#