நடிகை பூர்ணாவிடம் பிளாக்மைல்: 2 பேர் கைது..

டங்கமறு, சவரக்கத்தி, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்ப வர் பூர்ணா. சில தினங்களுக்கு முன் பூர்ணா வீட்டுக்கு வந்த ஒரு கும்பல் அவரை பெண் கேட்டதுடன் திருமணத்துக்கு வற்புறுத்தியது பணம் கேட்டு பிளாக் மைல் செய்தது. வந்தவர் கள் மீது சந்தேகம் அடைந்த பூர்ணா போலீசில் புகார் அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

பூர்ணாவை தொடர்ந்து மேலும் பல பெண்கள் கும்பல் மீது புகார் அளித்ததுடன் தங்களிடம் பிளாக்மைல் செய்து பணம் பறித்ததாகவும் புகாரில் கூறினர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக நடிகர் தர்மஜன் போல் காட்டி என்பவரை போலீசார் விசாரித் தனர். பிளாக் மைல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருந்ததா என்பது குறித்தும் விசாரித்தனர் அதில் பல தகவல்கள் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதன் அடிப்படையில் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹாரிஸ் மற்றும் ரபீக் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பிறகு பேட்டிஅளிப்பதாக பூர்ணா டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி