24மணி நேரத்தில் 999 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19,984 ஆக உயர்வு…

டெல்லி:

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,984 ஆக உயர்வடைந்து உள்ளது. இதை மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.  நேற்று 18,985 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 999 பேர் பாதிக்கப்பட்டு 19,984  ஆக அதிகரித்து உள்ளது.

அதுபோல பலி எண்ணிக்கையும் 603ல் இருந்து 640 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை  3260ல் இருந்து 3870 ஆக உயர்ந்து உள்ளது