10ம்வகுப்பு மாணவனை கடத்தி வந்து சென்னையில் குடும்பம் நடத்திய கேரள ஆசிரியை கைது

சென்னை:

10ம்வகுப்பு படித்து வந்த மாணவனை கடத்தி வந்து சென்னை சூளைமேடு பகுதியில் குடும்பம் நடத்தி வந்த  கேரள ஆசிரியை கேரள மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம்  கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஆசிரியை பெரோனா,  ஆலப்புழாவில் உள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார்.  அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவருக்கும் ஆசிரியை பெரோனோவுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் வயது வித்தியாசமின்றி காலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 23ந்தேதி இருவரும் திடீரென மாயமானார்கள். இது குறித்து மாணவனின் பெற்றோர் ஆழப்புலா காவல் நிலையத்தில், மாணவனை காணவில்லை என புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, இருவரையும் தேடி வந்த காவல்துறையினர், அவர்கள் சென்னையில் தங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை வந்த கேரள காவல்துறையினர், சென்னை காவலர்கள் உதவியோடு, சூளைமேடு பகுதியில் இருந்த  ஆசிரியை பெரோனாவை கைது செய்து மாணவனை மீட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.